நாகப்பட்டினம்: நாகூர் தர்கா கந்தூரி விழா வரும் 11 ம் தேதி துவங்குகிறது. நாகூர் தர்கா கந்தூரி விழா, வரும் 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் குறித்து, கலெக்டர் முனுசாமி, ஆய்வு மேற்கொண்டார். தர்கா வாசலை ஆக்கிரமித்து போடப்பட்டுள்ள தரை கடைகள், தள்ளு வண்டிகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார். சாக்கடை அடைப்புகளை உடன் அகற்றி, தூய்மையாக பராமரிக்கவும், நகராட்சி கழிவறைகளை, பக்தர்கள் பயன்படுத்தும் வகையில், சுத்தமாக பராமரிக்கவும், மொபைல் டாய்லெட் அமைக்கும் இடங்களை சுத்தம் செய்து பணிகளை விரைந்து முடிக்கவும் நகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தர்கா குளத்தில் குப்பைகளை அகற்றவும், உத்தரவிட்டார்.