களக்காடு: திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோயில் பங்குனி தேரோட்ட திருவிழா நேற்று நடந்தது. திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோயில் 108 வைணவஸ்தலங்களில் ஒன்றாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனிமாதம் தேரோட்ட திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு இக்கோயில் பங்குனி தேரோட்ட திருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுசுவாமி ஒவ்வொரு வாகனத்தில் வீதியுலா சென்றார். 5ம் நாளான கடந்த 30ம் தேதி இரவு 5 நம்பி சுசுவாமிகளும் கருட வாகனத்தில் வீதியுலா சென்றனர். மறுநாள் அதிகாலை மேலரதவீதியில் 5 நம்பி சுசுவாமிகளும், மகேந்திரகிரி மலையை நோக்கி சித்த மகரிஷிகளுக்கு காட்சி கொடுத்தனர். இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுசுவாமி தரிசனம் செய்தனர். 10ம் திருநாளான நேற்று தேரோட்ட திருவிழா நடந்தது. தேரோட்ட திருவிழாவை ஜீயர் சுசுவாமிகள் வடம்பிடித்து துவக்கி வைத்தார். தேரோட்ட திருவிழாவில் சுற்றுவட்டார பகுதி கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர். தேர் நான்கு ரதவீதிகளை சுற்றி வந்தது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.