பதிவு செய்த நாள்
08
ஏப்
2013
10:04
ஈரோடு: ஈரோடு சூரம்பட்டியில் உள்ள சமயபுரமாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா, மார்ச், 10ம் தேதி துவங்கியது. ஏப்ரல், 6ம் தேதி வாஸ்து சாந்தி பூஜை நடந்தது. நேற்று காலை, 9.30 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. இதில், சூரம்பட்டி சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஏப்ரல், 14ம் தேதி மதியம், 3 மணிக்கு காவிரியில் தீர்த்தம் கொண்டு வருதல் நடக்கிறது. ஏப்ரல், 15ம் தேதி சிறப்பு யாகபூஜையும், 16ம் தேதி காலை, 6 மணிக்கு, பொங்கல் விழா, மாவிளக்கு ஊர்வலம் நடக்கிறது. ஏப்ரல், 17ம் தேதி அம்பிகை திருவீதி உலா நடக்கிறது. 18ம் தேதி காலை, 10 மணிக்கு மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.