பந்தலூர்:பந்தலூர் அருகே பொன்னானி மாரியம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடந்தது. பொன்னானி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 5ம்தேதி காலை 4:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து, தர்மகர்த்தா நாராயணன் கொடியேற்றினார். 6ம்தேதி காலை 6:00 மணிக்கு அம்பாளுக்கு திருமஞ்சள் சாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் பொன்னானி ஆற்றங்கரையிலிருந்து பறவைகாவடி, பால்குட ஊர்வலம், வேல்காவடி ஊர்வலம் நடந்தது. நேற்று பகல் 12:00 மணிக்கு பூகுண்டம் மிதித்தலும், அன்னதானமும் நடந்தது. பூகுண்டத்தில் பக்தர்கள் காவடி எடுத்து பக்தி பரவசத்துடன் குண்டம் இறங்கினர். மாலை 6:00 மணிக்கு நடந்த தேர் பவனியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.