பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயிலில் ஜூலையில் தங்கத்தேரோட்டம் நடத்த ஏற்பாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஏப் 2013 10:04
கடையநல்லூர்:பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயில் தங்கத்தேர் வரும் ஜூலை மாதத்தில்தேரோட்டம் நடத்துவதற்கான முயற்சிகள்மேற்கொள்ளப்பட்டு வருவதாக முன்னாள் திருப்பணிக்குழு தலைவர் அருணாசலம் தெரிவித்தார்.பண்பொழி திருமலைக்கோயிலில்சுமார் 5கோடி ரூபாய் செலவில் மலைப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது தங்கதேர் இயக்கப்படுவதற்காக ஓடுதளம் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.இதனிடையில் தங்கதேர் நிறுத்துமிடம்கோயில் வளாகத்தில்சுமார் 10 லட்சம் ரூபாய் செலவில்மேற்கொள்ளப்பட்டுள்ளது.தேர் அமைக்கும் பணி மரத்திலான பணிகள் பெருமளவில் முடிவடைந்துள்ளன. இதனை தொடர்ந்துதேரில் தங்கம்சேர்க்கும் பணிகள் துவங்குவதற்காக ஏற்பாடுகள் தங்கதேர் கமிட்டி சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.உபயதாரர்கள் மூலமாகமேற்கொள்ளப்பட்டு வரும் இந்த பணிகள் குறித்து முன்னாள் திருப்பணிக்குழு தலைவரும், தங்கதேர் கமிட்டி தலைவருமான அருணாசலம் கூறுகையில், ""பண்பொழி திருமலைக்குமார சுவாமிகோயிலில் தங்கதேர் ஓடுவதற்கான அத்தனை ஏற்பாடுகளும்மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பக்தர்களின் விருப்பத்தினையும், எதிர்பார்ப்பினையும் தொடர்ந்து வரும் ஜூலை மாதத்திற்கு தங்கதேர் பணிகள் முழுமை பெறுவதற்கான அத்தனை முயற்சிகளும்கோயில் நிர்வாகத்தின் ஆலோசனையின்படி உபயதாரர்கள் மூலமாகமேற்கொள்ளப்பட்டு வருகிறது.தேர் பணிகள் நிறைவடைந்ததும்தேராட்டம் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார்.