பதிவு செய்த நாள்
08
ஏப்
2013
10:04
பேய்க்குளம், ஏப்.8- பேய்க்குளம் அருகே பெருமாள்குளம் ஸ்ரீ பெருமாள் சுவாமி கோயிலில் கொடைவிழாவையொட்டி 8ம் ஆண்டு 1008 திருவிளக்கு பூஜை நடந்தது.பேய்க்குளம் அருகேயுள்ள பெருமாள்குளம் ஸ்ரீ பெருமாள் சுவாமி கோயிலில் கொடை விழா துவங்கியது. தொடர்ந்து இக்கோவில் கொடைவிழா 10ஆம் தேதி வரை 6 நாள்கள் நடக்கிறது. முதல் நாள் (5ம் தேதி) காலை கும்பாபிஷேகம், மதியம் சிறப்பு அலங்கார பூஜைகளும், இரவு 8ம் ஆண்டு 27 கிராமங்களிலிருந்து பங்கு கொண்ட பெண்களின் 1008 திருவிளக்கு பூஜை வழிபாடு நடந்தது. பூஜைக்கு கோவில் தர்மகர்த்தாக்கள் சேர்மத்துரை, ராஜாமணி ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட இந்து முன்னணி செயற்குழு உறுப்பினர் பொன்கந்தசாமி பூஜையை துவக்கி வைத்தார். ஆழ்வார்திருநகரி ஒன்றிய பாஜ செயலர் மதியழகன் வரவேற்றார். பூஜையை பெருமாள்குளம் ராமலெட்சுமி வழி நடத்தினார். இதில் பங்கேற்ற பெண்கள் விளக்கேற்றி பக்தி பாடல்கள் பாடி சுவாமியை வழிபட்டனர். இதில் கோவில் நிர்வாகிகள் சிங்கராஜ், முருகேசன், சிவா, சிவராமகணேஷ், முத்துக்கிருஷ்ணன், சிவபெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கோயிலில் 2ம்நாள் (6ஆம் தேதி) காலையில் வில்லிசை, 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. 3ம் நாளான நேற்று உச்சிகால பூஜை, இரவு மஞ்சள்பெட்டி ஊர்வலம், அலங்கார பூஜைகளும் நடந்தது. 4ம்நாளான இன்று காலை 10 மணிக்கு வில்விசை, 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை, பிற்பகல் 2 மணிக்கு உணவு எடுத்தல். 5ம் நாளான நாளை இரவு 9 மணிக்கு செங்கிடார சுவாமிக்கு கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும், 10ஆம் தேதி6ம் நாளன்று இரவு 9 மணிக்கு சாமிதோப்பு அய்யாவின்புகழ் பாடும் சிவசந்திரனின் ஆன்மீக இன்னிசை கச்சேரி ஆகியவை நடக்கிறது.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கற்குவேல் அய்யனார் குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.