நாகப்பட்டினம்: நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழா துவங்கியது.நாகூர் ஆண்டவர் தர்காவில் 456ம் ஆண்டு கந்தூரி விழா துவங்கியது. காலை 11:00 மணிக்கு, நாகை முஸ்லிம் ஜமாத் சார்பில் நாகை, புதுப்பள்ளியில் இருந்து கொடி ஊர்வலம் புறப்பட்டு நாகை மற்றும் நாகூரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து இரவு 10:00 மணிக்கு தர்காவின் ஐந்து மினவராக்களிலும் கொடியேற்றப்படுகிறது.முக்கிய நிகழ்ச்சியாக 19ம் தேதி இரவு பீர் வைக்குதல் நிகழ்ச்சியும், 20ம் தேதி மாலை நாகையில் இருந்து சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு, 21ம் தேதி அதிகாலை, நாகூர் தர்காவில் சந்தனம் பூசும் வைபவம் நடக்கிறது. 22ம் தேதி நாகூர் கடற்கரையில் பீர் ஏகுதல் நிகழ்ச்சியை அடுத்து 24ம் தேதி இரவு தர்கா மினவராக்களில் ஏற்றப்பட்ட கொடி இறக்கப்பட்டு கந்தூரி விழா நிறைவடைகிறது.