ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில், கூடுதல் பாதுகாப்பிற்காக, காவலர்களுக்கு மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட கருவிகள் வழங்கப்பட்டன. சுவாமி, அம்மன் சன்னதி, பிரகாரங்களில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள கோயில் காவலர்களிடம்(முன்னாள் ராணுவ வீரர்கள்) வெடிகுண்டு, பிற ஆயுதங்களை கண்டறிய, மெட்டல் டிடெக்டர் கருவி, நவீன விளக்குகளை நேற்று, கோயில் இணை கமிஷனர் செல்வராஜ் வழங்கினார். கோயில் பேஷ்கார்கள் ராதா, அண்ணாத்துரை, உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகணன், கோயில் மேலாளர் (பொறுப்பு) கக்காரின் இருந்தனர்.