பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் அசுவதி தீர்த்தவாரி திருவிழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஏப் 2013 06:04
மயிலாடுதுறை: திருமெய்ஞானம் பிரம்மபுரீஸ்வரர் சுவாமி கோவிலில் நேற்று அசுவதி தீர்த் தவாரி திருவிழா நடைபெற்றது. நாகை மாவட்டம் பொறையாரை அடுத்த திருமெய்ஞானத்தில் அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தரால் பாடபெற்றதும், மார்கன்டேயர் வழிபட்ட சிவத லங்களில் 107வதுமான வாடாமலையால் சமேத பிரம்மபுரீஸ்வரர் சுவாமி கே õவில் உள்ளது. இக்கோவில் அருகேயுள்ள அசுவதி காசி தீர்த்த கிணற்று நீர், கங்கை புனித நீ ருக்கு சமமாக கருதப்படுகிறது. தினமும் இந்த கிணற்று நீரை எடுத்து சென்று திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வர சுவாமிக்கு அபிஷேகம் செ ய்வது வழக்கம். இந்த தீர்த்த கிணற்றில் அசுவதி அன்று மட்டுமே பக்தர்கள் நீராட அனுமதிக்கப்படுவர். திருமெய்ஞானத்தில் அசுவதி தீர்த்தவாரி விழா நடைபெற்றது. விழாவையொட்டி திருக்கடையூர் கோவிலில் இருந்து மார்கண்டேயர் வீதியுலாவா க அசுவதி காசி தீர்த்த கிணற்றை அடைந்தார். அங்கு அஸ்திரதேவருக்கு அபிஷேக, ஆராதணை நடத்தப்பட்டு, அமிர்தகடேஸ்வர சுவாமி தீர்த்தம் கொடுக்கும் தீர்த்தவாரி விழா நடைபெற்றது. தொட ர்ந்து மார்கண்டேயர் திருக்கடையூர் கோவிலுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. தீர்த்தவாரி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பிரம்ம தீர்த்த குளம், அசுவதி காசி தீர்த்த கிணற்றில் புனித நீராடி சுவாமி, அம்பாளை வழி பட்டனர். தீர்த்தவாரி விழாவிற்கான ஏற்பாடுகள் மற்றும் பூஜைகளை விஸ்வ னாதன், கணேஷ் மற்றும் வெங்கடேஷ் குருக்கல்கள் செய்திருந்தனர்.