பதிவு செய்த நாள்
12
ஏப்
2013
11:04
மதுரை: அயோத்தியில் ராமர் கோயில் அமைக்க வலியுறுத்தி விஸ்வ இந்து பரிஷத் சார்பில், ராம நாம ஜபயோக வேள்வி, மதுரையில் துவங்கியது. மதுரை மாவட்ட தலைவர் அசோகன் தலைமை வகித்தார். மாநில அமைப்பாளர் பெருமாள் முன்னிலை வகித்தார். மக்கள் தொடர்பு செயலாளர் சம்பத்குமார், திருவேடகம் ராமகிருஷ்ண தபோவன சுவாமி நியமானந்தா பேசினர். ராமநாம ஜப யோக வேள்வியை, பா.ஜ., மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்து பேசியதாவது: அயோத்தியில், ராமர் கோயில் அமைக்க, மக்கள் விரும்புகின்றனர். துறவிகள் எடுத்த முடிவின்படி ராமர் கோயில் கட்டுவதை வலியுறுத்தி, அனைத்து மாநிலங்களிலும், ராம நாம ஜப யோக வேள்வி துவங்கியுள்ளது; இது, மே 13 வரை நடக்கிறது. ஏப்., 19 மாலை 6 மணி முதல் 7 மணி வரை, அனைத்து பகுதிகளிலும், கூட்டு பிரார்த்தனையை மக்கள் நடத்துகின்றனர். விரைவில், அயோத்தியில் ராமர் கோயில் எழுப்புவோம், என்றார். மாநில இணை செயலாளர் சத்தியமூர்த்தி வரவேற்றார். மாவட்ட செயலாளர் ரத்தினகுமார் நன்றி கூறினார்.