திருக்கனூர்: செட்டிப்பட்டு காளியம்மன் கோவிலில் 108 பால் குட அபிஷேகம் வரும் 25ம் தேதி நடக்கிறது. திருக்கனூர் அடுத்த செட்டிப்பட்டு கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவிலில் சித்திரை பவுர்ணமியை முன்னிட்டு 4ம் ஆண்டு பால் குட அபிஷேகம் வரும் 25ம் தேதி நடக்கிறது. இதையொட்டி காலை 7.00 மணிக்கு, சங்கராபரணி ஆற்றங்கரையிலிருந்து சக்தி கரகத்துடன் 108 பால் குடம் எடுத்து வந்து, மதியம் 1.00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் நடக்கிறது. மாலை 4.00 மணிக்கு பொங்கல் வைத்து அபிஷேக ஆராதனை செய்யப்படுகிறது. இரவு 8.00 மணிக்கு சந்தனக்காப்பு அலங்காரத்துடன் அம்மன் வீதியுலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்து வருகின்றனர்.