சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் தெலுங்கு புத்தாண்டு பால்குடவிழா நடந்தது. பக்தர்கள், ராமர் பஜனை மடத்திலிருந்து பெரியகடை வீதி வழியாக கன்னிகா பரமேஸ்வரி அம்மன்கோயிலுக்கு ,பால்குடமெடுத்து வந்தனர். அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனை நடந்தது.பெண்கள் மாவிளக்கு வழிபாடு செய்தனர்.ஆர்ய வைஸ்ய மகா சபா தலைவர் லெட்சுமணன் தலைமையில் சமூகத்தினர் பங்கேற்றனர்.