தீவனூர் விநாயகர் கோவிலில் பிரம்மோற்சவ விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஏப் 2013 10:04
புதுச்சேரி: தீவனூர் சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவில் பிரம்மோற்சவ விழா இன்று துவங்குகிறது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம் தீவனூர் கிராமத்தில் உள்ள சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி, இன்று 16ம் தேதி காலை 9.30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் கொடியேற்றம், இரவு 9.00 மணிக்கு சுவாமி வீதியுலா நடக்கிறது. நாளை முதல் வரும் 21ம் தேதி வரை காலை மற்றும் இரவு சுவாமி மாட வீதியுலா நடக்கிறது. வரும் 22ம் தேதி காலை 10 மணிக்கு கணபதி ஹோமம், பொய்யாமொழி விநாயகருக்கு 1008 பால்குட அபிஷேகம் நடக்கிறது. 23ம் தேதி இரவு 9 மணிக்கு திரு பூணூல் கல்யாணம், 24ம் தேதி காலை 9.00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 25ம் தேதி மாலை 4.00 மணிக்கு புனித தீர்த்த குளத்தில் தெப்பல் உற்சவம், 26ம் தேதி இரவு 12.00 மணிக்கு முத்துப்பல்லக்கு நடக்கிறது. வரும் 23ம் தேதி முதல் 26ம் தேதி வரை பக்தர்களின் வசதிக்காக திண்டிவனம் மற்றும் செஞ்சி பகுதியில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. வரும் 22ம் தேதி முதல் 26ம் தேதி வரை பக்தர்களுக்கு மதியம் சமபந்தி விருந்து வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை பொய்யாமொழி விநாயகர் கோவில் பரம்பரை அறங்காவலர் சகுந்தலா அம்மாள், அதிகாரம் பெற்ற முகவர் மணிகண்டன் ஆகியோர் செய்துள்ளனர்.