திருப்புத்தூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் சித்திரை பிரமோற்சவம் துவங்கியது. நேற்று காலை 7 மணிக்கு கல்யாண மண்டபத்திற்கு சவுமியநாராயணப் பெருமாள் உபய நாச்சியாருடன் எழுந்தருளினார்.பெருமாளுக்குசிறப்பு பூஜை,ஆராதனை நடந்தது. தொடர்ந்து சக்கரத்தாழ்வார்,எட்டுத் திக்கு பாலகர்களுக்கு அழைப்பு விடுக்கும் வைபவம் நடந்தது.தொடர்ந்து கருடன் பொறிக்கப்பட்ட வெள்ளை நிறக் கொடிக்கும்,கொடி மரத்திற்கும்சிறப்பு பூஜை,ஆராதனை நடந்து பகல் 11 மணிக்கு கொடியேற்றம் நடந்தது.மாலையில் யாகசாலை பூஜை,ஹோமங்கள் நடந்தன. தொடர்ந்து காப்புக் கட்டி உற்சவம் துவங்கியது. இரவில் சிம்ம வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது.ஏப்.,25 மாலையில் சித்திரைத் தேரோட்டம் நடைபெறும்.