பழநி: பழநி, லட்சுமி நாராயணப்பெருமாள் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. ஏப். 23ல் திருக்கல்யாணமும், ஏப்.25ல் தேரோட்டம் நடக்கிறது.பழநி, தேவஸ்தான உபகோயிலான, லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா, சித்ரா பௌர்ணமி விழா ஏப். 26 வரை நடக்கிறது. நேற்று கொடியேற்றம், லட்சுமி நாராயண பெருமாளுக்கு விஷேச அபிஷேகம், பூஜைகள் செய்யப்பட்டது, கொடிப்பட்டத்திற்கு தீபாராதனை, கொடி மரத்தின் முன் கலசங்கள் வைத்து பூஜைகள் நடந்தது. துணை கமிஷனர் ராஜமாணிக்கம் உட்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.