தேவம்பட்டு: தேவம்பட்டு இளையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி அடுத்த, தேவம்பட்டு கிராமத்தில் அமைந்துள்ளது இளையம்மன் கோவில். அக்கோவிலின் கும்பாபிஷேகம் கடந்த, 13ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. அதன் பின்னர், நான்கு கால யாக சாலை பூஜைகள் நடந்தன. கடந்த, 15ம் தேதி அன்று, யாக சாலை புனித நீர் கொண்டு இளையம்மன் கோவில், விமான கலசத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து, இளையம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தேவம்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள், கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்டு, இளையம்மனை வழிபட்டனர். அன்று இரவு, வாண வேடிக்கையுடன் சிறப்பு மலர் அலங்காரத்தில், இளையம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.