கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஏப் 2013 11:04
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம் நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ பெரு விழா நேற்று துவங்கியது. அதனையொட்டி அதிகாலை 5.30 மணியிலிருந்து 7 மணிக்குள் பூஜைகள் செய்து, கொடியேற்றம் நடத்தினர். நேற்றிரவு பெருமாள் அம்ஸ வாகனத்தில் வீதியுலா உற்சவம் நடந்தது. தொடர்ந்து 24ம் தேதி வரை இரவு பெருமாள், தாயார் வீதியுலா உற்சவம் நடக்கிறது. 25ம் தேதி சித்திரை பெருமாள் தேர் வடம் பிடிக்கப்படுகிறது.