விழுப்புரம்: வளவனூர் ஐயப்பன் கோவிலில் சித்திரை விஷு கனி பூஜை நடந்தது. வளவனூர் சத்திரம் ஐயப்பன் கோவிலில், சித்திரை மாத பிறப்பையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. ஐயப்பன் சுவாமிசித்திரை விஷு கனி அலங்காரத்தில் அருள் பாலித்தார். விழுப்புரம் சப்தகிரி பஜனை மண்டலி குழுவினரின் சிறப்பு பஜனை நடந் தது. குருசாமி நடனசபாபதி குழுவினர் பூஜை ஏற்பாடுகளை செய்திருந்தனர்.