பதிவு செய்த நாள்
22
ஏப்
2013
10:04
திருவெண்ணெய்நல்லூர்: கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் நாளை, தாலி கட்டும் சிறப்பு விழா நிகழ்ச்சி நடக்கிறது. விழுப்புரம் மாவட்டம், கூவாகம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை பெருவிழா, கடந்த 9ம் தேதி துவங்கியது. முக்கிய விழாவான, சுவாமிக்கு திருக்கண் திறக்கும் நிகழ்ச்சி, நாளை (23ம் தேதி) இரவு நடக்கிறது. இதில், திருநங்கைகள், பூசாரிகளின் கையால் தாலி கட்டிக்கொண்டு, இரவு முழுவதும் ஆடிப் பாடி மகிழ்வர்.முன்னதாக, விழுப்புரத்தில் திருநங்கைகளுக்கு, "மிஸ் கூவாகம் போட்டி நடக்கிறது.சென்னை, கடலூர், விழுப்புரம், பண்ருட்டி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.