பதிவு செய்த நாள்
23
ஏப்
2013
11:04
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அஷ்டபுஜப் பெருமாள் கோவில் பிரம்மோற்சவம், நாளை(24ம் தேதி) துவங்குகிறது. காஞ்சிபுரத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் குறிப்பிடத்தக்கது அஷ்டபுஜப் பெருமாள் கோவில். இங்கு பெருமாள் கஜேந்திர புஷ்கரணிக் கரையில், புஷ்பவல்லி தாயாருடன், அஷ்டபுஜங்களிலும் ஆயுதம் தாங்கியபடி, அடியார்களை காத்து வருகிறார். இக்கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் பிரம்மோற்சவம் நடைபெறும். வழக்கம்போல் இந்த ஆண்டு உற்சவம், நாளை துவங்குகிறது. நாளை காலை 5:29 மணியில்இருந்து 7:10 மணிக்குள் கொடிஏற்றம் நடைபெறும். அன்று முதல் 6ம் தேதி வரை, தினமும் காலை மற்றும் இரவு, வெவ்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறும். அவற்றின் விவரம் :-
தேதி காலை உற்சவம் இரவு உற்சவம்
24 துவஜாரோஹணம், சப்பரம் சிம்ம வாகனம்
25 ஹம்ஸ வாகனம் சூர்யபிரபை
26 கருட சேவை ஹனுமந்த வாகனம்
27 சேஷ வாகனம் சந்திரபிரபை
28 நாச்சியார் திருக்கோலம் யாளி வாகனம்
29 வேணுகோபால் ஸ்வாமி சாத்துப்படிசூர்ணாபிஷேகம் யானை வாகனம்
30 திருத்தேர் திருமஞ்சனம்
1 திருப்பாதம் ஜாடி திருமஞ்சனம் குதிரை வாகனம்
2 ஆள்மேல் பல்லக்கு சக்கரகோடி விமானம்
3 த்வாதச ஆராதனம் வெட்டவேர் சப்பரம், துவஜாஅவரோஹணம்
4 விடயாற்றி முதல் நாள் திருமஞ்சனம் பெருமாள் புறப்பாடு
5 விடயாற்றி 2ம்நாள் திருமஞ்சனம் பெருமாள் புறப்பாடு
6 விடயாற்றி 3ம் நாள் திருமஞ்சனம் புஷ்ப பல்லக்கு