பதிவு செய்த நாள்
24
ஏப்
2013
10:04
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில், சந்திர கிரகணத்தை யொட்டி, (ஏப்.,25) மாலையில், நடை சாத்தப்படும். ராமேஸ்வரம் கோயிலில், நாளை மாலை 6 மணிக்கு நடை சாத்தப்பட்டு, இரவு 1.20 க்கு, கோயிலில் இருந்து, கிரகணத்திற்குரிய சுவாமி புறப்பாடாகி, அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருள்கிறார். மகா தீபாரதனை முடிந்த பின், தீர்த்தம் வாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் கோயிலுக்குள் வலம் வந்து, இரவு 1.55க்கு, சந்திரகிரகணம் முடிந்த பிறகு, சுவாமிக்கு கிரகண அபிஷேகம் செய்யப்படுகிறது. அதன்பின், அர்த்தஜாம பூஜைகள், நடைபெறும். ஏப்.,26 அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும்.