பதிவு செய்த நாள்
29
ஏப்
2013
10:04
ஸ்ரீவைகுண்டம்: கள்ளபிரான் சுவாமி திருக்கோயிலில் சித்திரை பிரம்மோஷ்சவம் இன்று கொடி ஏற்றத்துடன் துவங்குகிறது.நவதிருப்பதிகளில் தலைமை திருப்பதியும் பிரம்மனுக்கு படைப்பின் ரகஷ்யத்தை திருப்பி கொடுத்த ஸ்தலமான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயிலில் சித்திரை பிரம்மோஷ்சவத்தை முன்னிட்டு இன்று காலை 9 முதல் 10 மணிக்குள் கொடியேற்றமும், இரவு 6 மணிக்கு தங்க தோளுக்கினியானில் வீதி புறப்பாடும் நடக்கிறது. நாளை 30ம் தேதி இரண்டாம் திருநாளை முன்னிட்டு காலை தங்க தோளுக்கினியானில் வீதிபுறப்பாடும், இரவு 7 மணிக்கு சிம்ஹ வாகனத்தில் வீதி உலாவும் நடக்கிறது. வரும் 1ம் தேதி மூன்றாம் திருவிழாவை முன்னிட்டு காலை 7.30 மணிக்கு தோளுக்கினியானில் வீதி புறப்பாடும், 11 மணிக்கு திருமஞ்சனமும் தீர்த்த விநியோக கோஷ்டியும் மாலை 6 மணிக்கு அனுமான் வாகனத்தில் வீதி புறப்பாடும் நடக்கிறது. வரும் 2ம் தேதி 4ம் திருவிழா முன்னிட்டு காலை தங்க தோளுக்கினியானில் வீதி புறப்படும், காலை 11 மணிக்கு தங்க மசகிரியில் திருமஞ்சனம், தீர்த்த விநியோக கோஷ்டியும் நடக்கிறது. வரும் 3ம் தேதி 5ம் திருவிழாவை முன்னிட்டு காலை 9.30 மணிக்கு ஸ்ரீ கள்ளபிரான் சுவாமி, ஸ்ரீ காய்சினவேந்தபெருமாள், ஸ்ரீ விஜயாகனபெருமாள், ஆழ்வார்திருநகரி பொலந்து நின்றபிரான் ஆகியோருக்கு மங்களாகாசனம் நடக்கிறது. இரவு 9 மணிக்கு குடவரை பெருவாயிலில் சுவாமி நம்மாழ்வார் எதிர்சேவை கருடவாகனத்தில் சுவாமிகள் வீதி புறப்பாடும் நடக்கிறது. அதிகாலை 4 மணிக்கு விடையாற்று நடக்கிறது. வருகிற 4ம் தேதி, 6ம் தேதி திருவிழா முன்னிட்டு காலை 5.30 மணிக்கு நம்மாழ்வார் மங்களாகாசனம் 7 மணிக்கு கள்ளபிரான் எழுந்தருளல், மாலை 4 மணிக்கு தங்கமசகிரியில் வைத்து திருமஞ்சனம் தீர்த்த விநியோக கோஷ்டி ஆகியன நடக்கிறது. இரவு 6 மணிக்கு யானை வாகனத்தில் சுவாமி வீதிபுறப்பாடும் நடக்கிறது. வரும் 5ம் தேதியிலும் திருவிழா முன்னிட்டு காலை தங்க தோளுக்கினியானில் வீதி புறப்பாடும், 11 மணிக்கு தங்க மசகிரியில் வைத்து திருமஞ்சனம் நடக்கிறது. இரவு 9 மணிக்கு புஷ்ப பல்லக்கில் ஸ்ரீ ஆண்டாள் திருக்கோலத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. வரும் 6ம் தேதி 8ம் திருவிழாவை முன்னிட்டு காலை 7.30 மணிக்கு கொடிமரம் சுற்றி எழுந்தருளல், காலை 11 மணிக்கு திருமஞ்சனம் தீர்த்த விநியோக கோஷ்டி இரவு குதிரை வாகனத்தில் தேர்கடாவும் மற்றும் வீதி உலா நடக்கிறது. வரும் 7ம் தேதி 9ம் திருவிழாவை முன்னிட்டு காலை 6 மணிக்கு கொடி மரம் சுற்றி எழுந்தருளல், காலை 6.45 மணிக்கு சுவாமி திருத்தேரில் எழுந்தருளல் காலை 8.30 முதல் 9 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. இரவு 9 மணிக்கு பல்லக்கில் தவிழ்ந்த கிருஷ்ணர்கோலத்தில் வீதி புறப்பாடு நடக்கிறது. வரும் 8ம் தேதி 10ம் திருவிழாவை முன்னிட்டு காலை சோரநாதர் தீர்த்தவாரி, இரவு சப்தாவரணம் வீதி உலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி ராமசுப்பிரமணியன், ஸ்தலத்தார்கள் ஸ்ரீனிவாசன், வெங்கிடாச்சாரி, ஸ்ரீனிவாசன் மற்றும் ஊழியர்கள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.