பதிவு செய்த நாள்
07
மே
2013
12:05
அனுபவ அறிவை பயன்படுத்தி வெற்றிபெறும் மேஷராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் செவ்வாய் இரண்டாம் இடத்தில் உள்ளார். மாத முற்பகுதி நாட்களில் குரு, சுக்கிரனின் அனுகூல அமர்வு செவ்வாயுடன் உள்ளது. குரு மங்கள, சுக்கிர மங்கள யோகத்தின் பலனாக குடும்பத்தில் சுபநிகழ்வு உண்டாகும்.சமூகத்தில் உங்களை அவமானப்படுத்த முயற்சித்த சிலர் தோற்று ஓடுவர். வீடு, வாகனத்தில் முக்கிய பராமரிப்பு பணி தேவைப்படும். தாய்வழி உறவினர்களிடம் பாசம் வளரும். புத்திரர்களின் கவனக்குறைவான செயல்களை சரி செய்வதிலும் அவர்களை வழிநடத்துவதிலும் நிதான அணுகுமுறை நல்லது. உடல்நலத்திற்கு தகுந்த சிகிச்சை, உணவுக்கட்டுப்பாடு உதவும். தம்பதியர் சிறு சச்சரவுகளை பெரிதுபடுத்தி பேசுவர். இதனால் குடும்ப ஒற்றுமை பாதிக்கப்படும். தொழிலதிபர்கள் கூடுதல் மூலதன தேவையை எதிர்கொள்ள நேரிடும். நிர்வாக நடைமுறை செலவு அதிகரிக்கும். வியாபாரிகள் விற்பனைக்கு தகுந்த பொருட்களை கொள்முதல் செய்வது நல்லது. பணவரவு சுமாரான அளவில் இருக்கும். பணியாளர்கள் பொறுப்புணர்வுடன் செயல்படுவதால் மட்டுமே குளறுபடி வராமல் தவிர்க்கலாம். குடும்பப் பெண்கள் கணவர் மற்றும் அவர் வழி சார்ந்த உறவினர்களின் மாறுபட்ட செயல் குறித்து பேச வேண்டாம். பணிபுரியும் பெண்கள் வேலைகளை நிறைவேற்ற அதிக அவகாசம் எடுத்துக்கொள்வர். பணச்செலவில் சிக்கனம் நல்லது. சுயதொழில் புரியும் பெண்கள் அளவான மூலதனம், அதிக உழைப்பினால் சராசரி பணவரவு பெறுவர்.அரசியல்வாதிகளுக்கு சமரச பேச்சில் தாமத நிலை உருவாகும். விவசாயிகளுக்கு அளவான மகசூல், கால்நடை வளர்ப்பில் திருப்திகரமான லாபம் கிடைக்கும். மாணவர் களுக்கு எதிர்பார்த்த கல்லூரியில் இடம் கிடைக்க சிறு போராட்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும்.
உஷார் நாள்: 24.5.13 மாலை 5.05- 26.5.13 இரவு 7.54.
வெற்றி நாள்: ஜூன் 9, 10, 11
நிறம்: ரோஸ், வெள்ளை எண்: 1, 2
பரிகாரம்: மீனாட்சியை வழிபடுவதால் வாழ்வு வளமாகும்.