பதிவு செய்த நாள்
07
மே
2013
12:05
நடை, உடை, பாவனையில் பிறரை வசீகரிக்கும் ரிஷபராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ராசியில் ஆட்சி பலத்துடன் உள்ளார். மாத பிற்பகுதி நாட்களில் இரண்டாம் இடத்திற்கு வந்து குருவுடன் அமர்வு பெறுகிறார். எண்ணத்தில் கற்பனையும், செயல்களில் வசீகரமும் பெறுவீர்கள். சனி, ராகு ஆறாம் இடத்தில் அனுகூலமாக உள்ளனர்.வீடு, வாகனத்தில் தகுந்த பயன்பாட்டு வசதி பெற பராமரிப்பு பணி மேற்கொள்வீர்கள். புத்திரர்கள் பிடிவாத குணத்துடன் செயல்படுகிற கிரகநிலை உள்ளது. உடல்நிலை ஆரோக்கியமாக இருக்கும்.எதிரிகளால் தொந்தரவு வராத சுமூக வாழ்வு பெறுவீர்கள். கடன்களை அடைத்து மனதில் நிம்மதி காண்பீர்கள். தம்பதியர் பாசத்துடன் நடந்து குடும்பநலன் பாதுகாப்பர். தொழிலதிபர்கள் கூடுதல் மூலதனத்தில் அபிவிருத்தி பணி புரிவர். உற்பத்தி அதிகரித்து உபரி பணவரவைத் தரும். வியாபாரிகள் சந்தையில் போட்டி குறைந்து விற்பனையில் முன்னேற்றம் காண்பர். சராசரி பணவரவுடன் நிலுவைப்பணமும் வசூலாகும். பணியாளர்கள் பணித்திறன் வளர்த்து குறித்த காலத்தில் இலக்கை நிறைவேற்றுவர். குடும்பப் பெண்கள் விதவிதமான உணவு வகைகளை தயாரித்து குடும்ப உறுப்பினர்களின்அன்பு, பாராட்டையும் பெறுவர். பணிபுரியும் பெண்கள் சுறுசுறுப்பான மனதுடன் வேலைகளை சீக்கிரம் முடிப்பர். சலுகைகள், பதவி உயர்வு கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் கணவர், தோழியின் உதவியால் கூடுதல் ஆர்டர் கிடைத்து உற்பத்தி, பணவரவில் முன்னேற்றம் காண்பர். அரசியல்வாதிகளுக்கு திட்டங்கள் நிறைவேற அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். விவசாயிகளுக்கு மகசூல் அதிகமாகும். கால்நடை வளர்ப்பில் அபிவிருத்தி உண்டு. மாணவர்களுக்கு நினைத்த கல்லூரியில் இடம் கிடைக்கும்.
உஷார் நாள்: 26.5.13 இரவு 7.55 - 28.5.13 இரவு 10.16.
வெற்றி நாள்: மே 15, 16, 17
நிறம்: ஆரஞ்ச், நீலம் எண்: 7, 8
பரிகாரம்: வெங்கடாஜலபதியை வழிபடுவதால் சகல நன்மையும் கிடைக்கும்.