பதிவு செய்த நாள்
07
மே
2013
12:05
அழகை ஆராதிக்கும் கலைரசனை மிகுந்த கன்னிராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் புதன் ஆட்சிபலத்துடன் அனுகூல பலன் தரும் வகையில் ராசிக்கு பத்தாம் இடத்தில் உள்ளார். மாத முற்பகுதி நாட்களில் குரு, சுக்கிரன் தன் பங்கிற்கு அளப்பரிய பலன்களை வழங்குகின்றனர். உங்கள் பேச்சில் கடின வார்த்தைகள் வராமல் பார்த்துக் கொள்வது நல்லது.வீடு, வாகனத்தில் கிடைக்கிற வசதி திருப்திகரமாக இருக்கும். தாயின் அன்பு, ஆசி கிடைக்கும். புத்திரர்கள் தங்கள் செயல்களில் கவனக்குறைவாக நடந்துகொள்வர். பூர்வசொத்து பராமரிப்பதில் கொஞ்சம் செலவு அதிகரிக்கும். ஏறுக்குமாறாக பேசுபவர்களிடம் இருந்து விலகுவதால் தேவையற்ற சிரமம் தவிர்க்கலாம். உடல்நலம் சுமாராக இருக்கும். கடனில் ஒரு பகுதியை செலுத்துவதால் பணப்பளு குறையும். தம்பதியர் பாசத்துடன் நடந்து குடும்பத்தில் ஒற்றுமை, சந்தோஷம் பாதுகாப்பர். நண்பர்களிடம் உங்கள் மீதான நல்ல எண்ணம் அதிகரிக்கும் வகையில் இனிய நிகழ்வு ஏற்படும்.தொழிலதிபர்கள் உற்பத்தியின் தரம், அளவு அதிகம் கிடைக்கப்பெறுவர். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். வியாபாரிகளுக்கு அதிக விற்பனை நடந்து உபரி வருமானம் பெறுவர். அபிவிருத்திப்பணிகள் திட்டமிட்டபடி நிறைவேறும். பணியாளர்கள் புதிய நுணுக்கங்களை பின்பற்றி குறித்த காலத்தில் பணி இலக்கை நிறைவேற்றுவர். குடும்பப் பெண்கள் கணவரின் அன்பு, தாராள பணவசதி கிடைத்து மகிழ்ச்சிகர வாழ்வு நடத்துவர். ஆடை, ஆபரணம் வாங்க அனுகூலம் உண்டு. பணிபுரியும் பெண்கள் சுறுசுறுப்பாக செயல்பட்டு குறித்த காலத்தில் வேலைகளை முடிப்பர். பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் மூலதனத்துடன் அபிவிருத்தி பணி புரிவர். உற்பத்தி, விற்பனை முன்னேற்றம் பெறும்.அரசியல்வாதிகள் ஆதரவாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவர். விவசாயிகளுக்கு அளவான மகசூல் கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் ஓரளவு லாபம் உண்டு. மாணவர்களுக்கு எதிர்பார்த்த கல்லூரியில் இடம் கிடைக்க சற்று போராட வேண்டும்.
உஷார் நாள்: 4.6.13 மதியம் 1.07- 6.6.13 இரவு 10.35.
வெற்றி நாள்: மே 25, 26
நிறம்: ஆரஞ்ச், நீலம் எண்: 7, 8
பரிகாரம்: பைரவரை வழிபடுவதால் சிரமம் விலகி நன்மை சேரும்.