பதிவு செய்த நாள்
07
மே
2013
12:05
சிரமங்களை துணிச்சலுடன் எதிர்கொள்ளும் சிம்மராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் சூரியன் அனுகூல பலன் தரும் வகையில் ராசிக்கு பத்தாம் இடத்தில் உள்ளார். நற்பலன் தரும் கிரகங்களாக புதன், சனி, ராகு செயல்படுகின்றனர். உங்களின் அன்பு, கருணை நிறைந்த செயல்களால் நற்பெயர் பெறுவீர்கள்.குடும்பத்தின் முக்கிய தேவைகளை தாராள பணச்செலவில் நிறைவேற்றுவீர்கள். வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். வாகன வகையில் தேவையான பாதுகாப்பு நடைமுறை பின்பற்றுவது அவசியம். தாய்வழி உறவினர்களுக்கு இயன்ற அளவில் உதவுவீர்கள். புத்திரர்கள் கடும் முயற்சியால் படிப்பு, வேலைவாய்ப்பில் நற்பலன் அடைவர்.உங்களின் எதிரிகள் அடங்கிப் போவதுடன், உங்களிடமே உதவி கேட்டு ஓடி வருவர். உடல்நலம் திருப்திகரமாக அமைந்து பணிகளில் ஆர்வமுடன் செயல்படுவீர்கள். வெளியூர் பயணம் இனிதாகி புதிய அனுபவம் பெற்றுத்தரும்.தம்பதியர் மாத முற்பகுதி நாட்களில் ஒருவருக்கொருவர் மனக்குறையுடன் நடந்துகொள்வர். அதன்பின் ஒற்றுமை வளர்ந்து குடும்பத்தில் மகிழ்ச்சி உருவாகும். நண்பர்களுக்கு முக்கிய தருணங்களில் உதவிபுரிந்து அவர்கள் மனதில் இடம்பெறுவீர்கள்.தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தம் கிடைத்து உற்பத்தி, பணவரவில் முன்னேற்றம் காண்பர். வியாபாரிகள் அதிக விற்பனை அமைந்து தாராள பணவரவு பெறுவர். பணியாளர்கள் குறித்த காலத்தில் வேலைகளை முடித்து நற்பெயரும் சலுகைகளும் பெறுவர்.குடும்பப் பெண்கள் கணவரின் கருத்துகளுக்கு உரிய மரியாதை தருவதால் மட்டுமே குடும்ப ஒற்றுமை சீராக இருக்கும். பணிபுரியும் பெண்கள் ஆரோக்கிய உடல்நலத்துடன் பணி இலக்கை திறம்பட நிறைவேற்றுவர். தாமதமான சலுகைகள் எளிதில் கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் அபிவிருத்தி பணி செய்ய வங்கிகளிடம் எதிர்பார்த்த நிதிஉதவி கிடைக்கும்.அரசியல்வாதிகள் எதிரிகளிடமும் நற்பெயர் பெற அனுகூலம் உண்டு. விவசாயிகளுக்கு மகசூல் செழித்து நல்ல விலை கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் அளவான வருமானம் உண்டு. மாணவர்களுக்கு எதிர்பார்த்த கல்லூரியில் இடம் கிடைக்கும்.
உஷார் நாள்: 2.6.13 காலை 6.11- முதல் 4.6.13 மதியம் 1.06.
வெற்றி நாள்: மே 22, 23, 24
நிறம்: பச்சை, வெள்ளை எண்: 2, 5
பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபடுவதால் சுபநிகழ்வு உருவாகும்.