காரைக்கால்:காரைக்கால் நித்தீஸ்வரம் சுந்தரமூர்த்தி விநாயகர் கோயிலில் மகா யாக வைபவத்தையொட்டி மூலவருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் நடந்தது.காரைக்கால் கோயில்பத்து அருகில் உள்ள நித்தீஸ்வரம் சுந்தரமூர்த்தி விநாயகர் கோயிலில் சங்கடஹர மகா சுந்தரகணபதி மகா யாக வைபவம் கடந்த ஏப்.24ம் தேதி பந்தக்கால் முகூர்த்தத்துடன் துவங்கியது. கடந்த 25ம் தேதி முதல் 4ம் தேதி வரை சிறப்பு அபிஷேக ஆராதனை, 5ம் தேதி சுந்தரகணபதி கலச ஆவாஹனம், 6ம் தேதி கோபூஜையுடன் 2ம் கால யாக பூஜை நடந்தது.வேதிகார்ச்சனை,விசேஷத்ரவ்யாதி ஷண்ணவதிஹோமங்கள், மூலமந்தர ஹோமங்கள், கஜபூஜை, பிரம்மசாரி பூஜை, லெட்சுமிசுவாசினி பூஜை சமர்ப்பணம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு சுந்தர விநாயகருக்கு சிறப்பு அபிஷேகத்துடன் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. நேற்று விடையாற்றி உற்சவம் நடந்தது.