காஞ்சிபுரம்:சித்திரை பிரதோஷ வழிபாடு கோலாகலமாக நடந்தது.காஞ்சிபுரம், காந்தி ரோட்டில் வழக்கறுத்தீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில், மாதந்தோறும் பிரதோஷம் மற்றும் சிவராத்திரி உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்து வருகின்றன.நேற்று முன்தினம் மாலை 6:00 மணி அளவில், சித்திரை பிரதோஷத்தையொட்டி வழக்கறுத்தீஸ்வரர் கோயிலில் உள்ள நந்திக்கு, சிறப்பு பூஜையும், தீபாராதனையும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டு சென்றனர்.