புதுச்சேரி:அங்காளபரமேஸ்வரி கோவிலில் 6ம் ஆண்டு பால்குட அபிஷேகம் நடந்தது.பாரதிதாசன் மகளிர் கல்லூரி எதிரே உள்ள அங்காளபரமேஸ்வரி கோவிலில் 6ம் ஆண்டு பால்குட அபிஷேகம் மற்றும் சித்திரை அமாவாசை பெருவிழா நேற்று நடந்தது. காலை 7.30மணிக்கு காப்பு கட்டுதலைதொடர்ந்து அலகு போடும் நிகழ்ச்சி நடந்தது.அலகு குத்தி பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். காலை 9.00 மணிக்கு வரசித்தி விநாயகர் கோவிலிருந்து மாடவீதி வழியாக பால் குடம் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு, அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. 12.30 மணிக்கு தீபாராதனை, இரவு 7.00 மணிக்கு கும்பம் போடுதல் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகக்குழு மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.