பதிவு செய்த நாள்
11
மே
2013
10:05
கோட்டயம்: கேரள மாநிலம் கோட்டயம் அருகே, கூத்தாட்டுக்குளம் நெல்லிக்காட்டுமனா பகவதி கோயிலில், அட்சயதிரிதியை முன்னிட்டு மே 13 ல் ஹோமம், லட்சதீபம் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கின்றன. கோட்டயத்தில் இருந்து 39 கி.மீ., எர்ணாகுளத்தில் இருந்து 25 கி.மீ., தொலைவில் உள்ள இக்கோயிலில், தமிழகத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவில் செல்கின்றனர். இங்கு பிரசாதமாக, "நோய் தீர்க்கும் மருந்து வழங்கப்படுவது வழக்கம். இங்கு நடக்கும் நோய்தீர்க்கும் பூஜை பிரசித்தி பெற்றது. அட்சயதிரிதியையை முன்னிட்டு, காலை 6 மணிக்கு 1008 தேங்காய்கள் பூஜை செய்யப்பட்டு, கணபதி ஹோமம் நடக்கிறது. சூரியகாலடி பரமேஸ்வரன் பத்திரிபாடு முன்னிலை வகிக்கிறார். தொடர்ந்து சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடக்கின்றன. மாலை 6 மணிக்கு, லட்சதீபம் ஏற்றப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, ஸ்ரீதரீயம் ஆயுர்வேத மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் நாராயணன் நம்பூதிரி, டாக்டர்கள் என்.பி.பி. நம்பூதிரி, நாராயணன் நம்பூதிரி செய்துள்ளனர். பூஜை விபரங்களுக்கு 094478 75067.