பதிவு செய்த நாள்
13
மே
2013
10:05
ஸ்ரீபெரும்புதூர்: ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமிகோவிலில், நேற்று, சேஷ வாகனத்தில் ராமானுஜர் உலா வந்து அருள் பாலித்தார். இன்று, பிரசித்தி பெற்ற ராமானுஜர் தேரோட்டம்கோலாகலமாக நடைபெற உள்ளது.ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமிகோவிலில், கடந்த 5ம்தேதி, ராமானுஜர் அவதார உற்சவம் துவங்கியது. அன்று முதல், தினமும், காலையிலும், மாலையிலும் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.நேற்று காலை, அலங்கரிக்கப்பட்டசேஷ வாகனத்தில் எழுந்தருளி,தேரடி, காந்திரோடு, செட்டி தெரு, திருமங்கையாழ்வார் தெரு வழியாக வீதி உலா வந்தார். விழாவின் 9ம் நாள் உற்சவமான இன்று, ராமானுஜர் திருத்தேரில் அமர்ந்து வீதி உலா வருவார்.இன்று அதிகாலை, 4:30 மணிக்குமேல்,மேஷ லக்னத்தில், திருத்தேரோட்டம் நடக்க உள்ளது.காலை 7:00 மணிக்கு, பக்தர்கள் வடம் பிடித்து,தேர் இழுக்க, புறப்பாடு நடைபெறும். ஸ்ரீபெரும்புதூர் ”ற்றியுள்ள, கிராமங்களில் இருந்து ஏராளமானோர் இதில் கலந்து கொள்வார்கள்.தேர் செல்லும் தெருக்களில், அன்னதானம் வழங்கப்படும். பக்தி பாடல்கள் பாடிய வண்ணம் பஜனைகோஷ்டிகள் உடன் வருவார்கள். ஸ்ரீபெரும்புதூர் காவல்துறை சார்பில், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.தேரோட்டத்தை முன்னிட்டு, தீயணைப்பு படையினர், மருத்துவ துறையினர் முகாமிட்டு உள்ளனர்.