பதிவு செய்த நாள்
13
மே
2013
10:05
பந்தலூர்: பந்தலூர் அருகே குந்தலாடி மாரியம்மன் கோவில் திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். குந்தலாடி மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 10ம் தேதி காலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. 11ம் தேதி காலை சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, பொன்னானி ஆற்றங்கரையிலிருந்து பறவைகாவடி, தூக்குகாவடி, ஒன்பது அடி வேல் குத்திய பக்தர்களுடன், பால்காவடி மற்றும் 150 ஆண், பெண்கள் பங்கேற்ற பால்குட ஊர்வலம் பக்தர்களை பரவசப்படுத்தியது. தொடர்ந்து, குண்டம் இறங் குதல், அன்னதான நிகழ்ச்சி, மாலை தேர் ஊர்வலம், கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று காலை மாவிளக்கு பூஜையும், மஞ்சள் நீராட்டு விழாவுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது. விழாவில், சுற்றுப்புற கிராம மக்கள் திரளாக பங்கேற்றனர்.