பதிவு செய்த நாள்
14
மே
2013
11:05
சிவகங்கை:நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில், வைகாசி விசாக திருவிழா, மே 16ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டை பிரசித்த பெற்ற கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் பல்வேறு நேர்த்தி செலுத்துவர். ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா சிறப்பாக நடக்கும். கொடியேற்றம்: 2013ம் ஆண்டிற்கான வைகாசி விசாக விழா, மே 16ம் தேதி காலை 10.35 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்று மாலை 4 மணிக்கு, சங்காபிஷேகம்,இரவு வெள்ளிகேடயத்தில், அம்மன் திருவீதி உலா நடக்கிறது.மே 21ம் தேதி வரை தினமும் அம்மன் காலையில் வெள்ளி கேடயத்திலும், இரவு சிம்மம், காமதேனு, யானை, பூத, வெள்ளி ரிஷப வாகனத்தில் திருவீதி உலா வருவார். மே 22 அன்று, காலை 9.30 மணிக்கு, அம்மன் பல்லக்கில் எழுந்தருள்வார். அன்று இரவு 7 மணிக்கு, கோயில் பிரகாரத்தில் தங்க ரதத்தில், அம்மன் வளம் வருதல், இரவு 10 மணிக்கு, அன்னவாகனத்தில், திருவீதி உலா வரும். மே 23ல் இரவு 7.30 மணிக்கு வெள்ளி ரதத்தில், சுவாமி திருவீதி உலா வும், மே 24ல் காலை 9.30 மணிக்கு,தேரோட்டமும் நடை பெறும். இரவு புஷ்ப பல்லக்கில் எழுந்தருள்வார். 10ம் நாளான மே 25 அன்று,காலை 11 மணிக்கு தீர்த்தவாரி உற்சவம், அதை தொடர்ந்து பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. 11ம் நாளான்று மே 26ல் காலை உற்சவ சாந்தி பூஜை நடக்கும். இரவு அம்மனின் ஊஞ்சல் உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.கோயில் நிர்வாகிகள் ஏற்பாட்டை செய்து வருகின்றனர்.