பதிவு செய்த நாள்
15
மே
2013
09:05
பழநி : வைகாசி விசாகத் திருவிழா, பழநி கோயிலில் மே 18 ம் தேதி, துவங்குகிறது. 23 ம் தேதி மாலை, 6:00 மணிக்கு, முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை கல்யாணம் நடக்கிறது. வரும், 24 ம் தேதி, வைகாசி விசாகத்திற்காக, மலைக்கோயில் சன்னதி, அதிகாலை, 4 :00 மணிக்கு திறக்கப்படுகிறது. பெரியநாயகி அம்மன் கோயில் நிலையில் இருந்து, மாலை, 4:35 மணிக்கு தேரோட்டம் துவங்குகிறது. 27 ம் தேதி, பெரியநாயகி அம்மன் கோயிலில், திருஞானசம்பந்தர் குருபூஜை விழா நடக்கிறது.