பதிவு செய்த நாள்
16
மே
2013
10:05
கன்னியாகுமரி:கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் வைகாசிவிசாக பெருந்திருவிழா நேற்று (15ம் தேதி)கொடியேற்றத்துடன் தொடங்கியது.இந்தியாவின் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான கன்னியாகுமரி பகவதியம்மன்கோயிலில் நடக்கும் முக்கிய விழாக்களில் ஒன்றான வைகாசிவிசாக பெருந்திருவிழா நேற்று (15ம்தேதி) காலை திருக்கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக கொடிபட்டம் கோயில் உட்பிரகாரம் வழியாக சுற்றி கொண்டுவரப்பட்டது. காலை 8.30 மணிக்கு லலிதா சகஸ்ரநாமம் பாராயணம், 10 மணிக்கு சிறப்புஅபிஷேகம், 12 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு சமயஉரை, இரவு 7 மணிக்கு பக்தி இன்னிசை, 9 மணிக்கு தேவி பூப்பந்தல் வாகனத்தில் திரு வீதி உலாவருதல் நடக்கிறது. இரண்டாம் நாள் விழாவான நாளை காலை 7 மணிக்கு பல்லக்கில் தேவி திருவீதி உலாவருதல், 10 மணிக்கு சிறப்புஅபிஷேகம், பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு சமயஉரை, இரவு 7 மணிக்கு பக்திஇன்னிசை, 9 மணிக்கு கிளிவாகனத்தில் தேவி திருவீதி உலா ஆகியன நடக்கிறது. மூன்றாம் நாள் (17ம்தேதி) முதல் எட்டாம் நாள் திருவிழா (22ம்தேதி) வரை காலையில் சிறப்பு அபிஷேகம், தேவி வாகனத்தில் வீதி உலா, மதியம் அன்னதானம், மாலையில் சமயஉரை, மற்றும் கலைநிகழ்ச்சிகள், இரவு 9 மணிக்கு தேவி வாகனங்களில் திருவீதி உலாவருதலும் நடக்கிறது.
தேர்திருவிழா: ஒன்பதாம் நாள் விழாவான 23ம்தேதி காலை 9 மணியிலிருந்து 10 மணிக்குள் தேர்திருவிழா நடக்கிறது. வனத்துறை அமைச்சர் பச்சைமால் தேர்வடம் தொட்டு இழுக்கிறார். எஸ்.பி., மணிவண்ணன், கன்னியாகுமரி டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் முன்னிலை வகிக்கின்றனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர். பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு மண்டகபடி, இரவு 7.30 மணிக்கு பக்தி இன்னிசை மற்றும் பஜனை, 9 மணிக்கு வெள்ளிகலைமான் வாகனத்தில் தேவிதிருவீதி உலாவருதல் ஆகியன நடக்கிறது.
தெப்பத்திருவிழா: 10ம் நாள் (24ம்தேதி) காலை 8.30 மணிக்கு அம்மன் ஆறாட்டுக்கு எழுந்தருளல், மாலை 5 மணிக்கு மண்டகபடியும், 6 மணிக்கு சமயஉரையும், இரவு 7 மணிக்கு பக்தி பஜனை, 9 மணிக்கு பூப்பந்தல் வாகனத்தில் தேவி திருவீதி உலா, 10 மணிக்கு அம்மன் தெப்பத்திற்கு எழுந்தருளல் நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை தேவசம்போர்டு இணைஆணையர் ஞானசேகர், நாகர்கோவில் தொகுதி கண்காணிப்பாளர் ஸ்ரீமூலவெங்கடேசன்,கோயில் மேலாளர் சோணச்சலம் ஆகியோர் செய்துவருகின்றனர்.