மேலூர்:மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் உப கோயிலான திருவாதவூர் திருமறைநாத சுவாமி கோயிலில், நேற்று வைகாசி பெருவிழா கொடியேற்றம் நடந்தது. மே 19ல், பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமி மேலூருக்கு எழுந்தருளும் மாங்கொட்டை திருவிழா, மே 22ல் திருக்கல்யாணம், 23ல் தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை, தக்கார் கருமுத்து கண்ணன், இணை ஆணையர் ஜெயராமன், பேஷ்கார் ஜெயபிரகாஷ் செய்து வருகின்றனர்.