பழநி கோயில் உண்டியல் வசூல் 1 கோடியே 7 லட்சம் ரூபாய்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17மே 2013 10:05
பழநி:பழநிகோயில் உண்டியல் வசூல், 20 நாட்களில் ஒரு கோடியே 7 லட்ச ரூபாயை எட்டியுள்ளது. பழநி மலைக்கோயில், கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் எண்ணிக்கை நடக்கிறது. ரொக்கமாக ஒரு கோடியே 7 லட்சத்து 47 ஆயிரத்து 928 ரூபாயும். தங்கம் 718 கிராம். வெள்ளி 3 ஆயிரத்து 878 கிராம். அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளின் கரன்சி 129 இருந்தன. இன்றும் உண்டியல் எண்ணிக்கை நடக்கிறது. பழநி கோயில் இணைக்கமிஷனர் பாஸ்கரன், துணை கமிஷனர் ராஜமாணிக்கம் உடனிருந்தனர்.