பதிவு செய்த நாள்
22
மே
2013
11:05
புதுச்சேரி: குரு சித்தானந்த சுவாமிகளின் 176ம் ஆண்டு குரு பூஜை விழா, வரும் 29ம் தேதி நடக்கிறது.குரு பூஜையை முன்னிட்டு, கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில், 28ம் தேதியன்று, மாலை 6.00 மணிக்கு, கலச பிரதிஷ்டை செய்யப்பட்டு, கணபதி ஹோமத்துடன் பூஜைகள் துவங்குகிறது. மறுநாள் 29ம் தேதி, காலை 6.00 மணிக்கு, நவக்கிரக ஹோமம், ருத்திர ஜபம், 7,00 மணிக்கு சுவாமிக்கு மகா அபிஷேகம், 10,00 மணிக்கு கலசாபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. விழாவை தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்காக, கோவில் வளாகத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. மகா அபிஷேகத்திற்கு தேவையான பால், பழம், தேன், விபூதி, சந்தனம் கொடுக்க விரும்பும் பக்தர்கள், 29ம் தேதியன்று காலை 6.00 மணிக்குள் தேவஸ்தானத்தில் அளிக்கலாம்.குரு பூஜையை முன்னிட்டு, 28ம் தேதியன்று மாலையில், நாடகம், பக்தி இசை நிகழ்ச்சி, 29ம் தேதி மாலையில், நடனம், ஆன்மிக சொற்பொழிவுகள் நடக்கிறது.