Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆலங்குடி சுவாமிகளின் 78வது ஆராதனை ... கோவில் ஊழியர்களுக்கு பணிக்கொடை!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம் அஹோபில மடம் 46வது ஜீயர் பொறுப்பேற்பு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

24 மே
2013
10:05

திருச்சி: ஸ்ரீரங்கம் அஹோபில மடம், 46வது ஜீயராக, ஸ்ரீரங்கநாத யதீந்திர மகாதேசிகன் சுவாமிகள், நேற்று பட்டமேற்றுக் கொண்டார். வைணவ திருத்தலங்கள் மற்றும், 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். கோவிலுக்கு முத்தாய்ப்பாக, 236 அடி உயரத்துடன், தென்கிழக்கு ஆசியாவிலேயே மிக உயர்ந்த கோபுரம் என்ற பெருமையை பெற்றது ஸ்ரீரங்கம் ராஜகோபுரம். மொட்டை கோபுரமாக நின்ற நிலையில், 1979 மே, 20ம் தேதி, ஸ்ரீரங்கம் அஹோபில மடம், 44வது பட்டம், ஸ்ரீமத் அழகிய சிங்கர் ஜீயர் சுவாமிகளின் பெரும் முயற்சியினால் கட்டப்பட்டது. மடத்தின், 45வது ஜீயராக பட்டமேற்ற, நாராயண யதீந்திர மகாதேசிகன் என்கிற, ஸ்ரீமத் அழகிய சிங்கர் சுவாமிகள், 89, கடந்த, 18ம் தேதி இரவு, 12:25 மணிக்கு, காலமானார். அதைத் தொடர்ந்து, இளையபட்டம், ஸ்ரீரங்கநாத யதீந்திர மகாதேசிகன் சுவாமிகள் என்கிற, ஸ்ரீமத் அழகிய சிங்கர் சுவாமிகள், 58, ஸ்ரீரங்கம் மடம், தசாவதார சன்னதியில், 46 வது ஜீயராக, நேற்று காலை, பட்டமேற்றார். மடத்தின் சம்பிரதாயப்படி, பட்டமேற்றுக் கொண்ட புதிய ஜீயருக்கு, மறைந்த ஜீயர் அணிந்திருந்த கணையாழி, முறைப்படி அணிவிக்கப்பட்டது. தற்போதைய ஜீயர், 2009ம் ஆண்டு முறைப்படி, இளைய பட்டமாக, தீட்சை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar