மண்ணச்சநல்லூர்: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள சப்த குரு ஸ்தலமான உத்தமர் கோவிலில் வரும் 28ம் தேதி குரு பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம் நடக்கிறது.இத்தலத்தில் வேறெந்த கோவிலிலும் இல்லாத சிறப்பாக சப்த குருக்கள் எனப்படும், ஏழு குரு பகவான்களும் ஒருங்கே அமைந்த இக்கோவிலில் குருபெயர்ச்சியில் பங்கு கொள்வது எண்ணிலடங்கா நற்பலன்களை தரும்.ஆண்டு தோறும் குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசம் செய்வது குருபெயர்ச்சி என அழைக்கப்படுகிறது. இந்தாண்டு வரும் 28ம் தேதி குரு பகவான் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பிரவேசிக்கிறார்.அதுசமயம் மேஷம், மிதுனம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசிகள் பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகளாக கருதப்படுகின்றன. உத்தமர் கோவிலில் வரும் 28ம் தேதி குரு பெயர்ச்சி பரிகார ஹோமத்தில் பங்கு பெறுபவர்களுக்கு ஒருபுறம் தட்சிணா மூர்த்தியும், மறுபுறம் பிரம்மா உருவமும் பொறித்த வெள்ளி டாலர் பிரசாதமாக வழங்கப்படுகிறது.விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சந்திரசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர். குரு பெயர்ச்சி ஹோமத்தில் 250 ரூபாய் செலுத்தி முன் பதிவு செய்து கலந்துகொள்ளலாம்.