பதிவு செய்த நாள்
25
மே
2013
11:05
திருநெல்வேலி: கீழப்பாவூர் நரசிம்மர்கோயிலில் வருஷாபிஷேகம் மற்றும் நரசிம்ம ஜெயந்தி விழா நடந்தது.பாவூர்சத்திரம் அடுத்துள்ள கீழப்பாவூரில் அபூர்வ வடிவில் காட்சிதரும் நரசிம்மர்கோயில் உள்ளது. தட்சிண அகோபிலம் எனபோற்றப்படும் இந்தகோயில் சுமார் ஆயிரத்து 200 ஆண்டுகள் பழமையானது. தமிழகத்திலேயே கீழப்பாவூரில் மட்டும் தான் 16 கரங்களுடன் திரிபங்க நிலையில் நரசிம்மர் காட்சி தருகிறார்.நீண்டகாலத்திற்கு கடந்த 2012ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து முதலாமாண்டு வருஷாபிஷேகம் மற்றும் நரசிம்ம ஜெயந்தி விழா நடந்தது. விழாவில் 16 வகை புஷ்பங்களால் யாகம் நடந்தது. விஷ்வக்ஷேன ஆராதனை,வேத பாராயணம், 108 கலச அபிஷேகம், 108 லிட்டர் பால் அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. மூலமந்திரஹோமம், புருஷ சுக்தஹோமம், மகா விஷ்ணு சுக்த ஹோமம் மற்றும் மகாலட்சுமிஹோமம் நடந்தது.தொடர்ந்து அலர்மேல் மங்கா பத்மாவதி சமேத பிரசன்ன வெங்கடாசலபதி மற்றும் நரசிம்மருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் பக்தி சொற்பொழிவு நடந்தது. விழாவில் எம்.பி.,ராமசுப்பு, எம்எல்ஏ.,பி.ஜி.ராஜேந்திரன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி,மேற்குப்பகுதி செயல் அலுவலர் கணபதி முருகன், வருமானவரித்துறை மற்றும் கலால் வரி உயர்வு அதிகாரி ஒருவரும் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்தும் சுமார் 6 ஆயிரம்பேர் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை நரசிம்ம சுவாமி கைங்கர்ய சபையினர், இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.