திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், வைகாசி விசாகத்தின் உச்ச நிகழ்ச்சியாக, மொட்டையரசு திருவிழா நேற்று நடந்தது.இக்கோயிலில் மே 15ல் துவங்கிய வைகாசி விசாக விழாவில் முக்கிய நிகழ்ச்சியான பால்குட உற்சவம் நேற்றுமுன்தினம் நடந்தது. நேற்று மொட்டையரசு விழாவை முன்னிட்டு, காலை சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை தங்க குதிரை வாகனத்தில் தியாகராஜர் பொறியியல் கல்லூரி வளாக திடலில் எழுந்தருளினார். பக்தர்களின் திருக்கண் மண்படங்களில் அருள்பாலித்து, இரவு 11 மணிக்கு பூப் பல்லக்கில் புறப்பாடாகி கோயில் சென்றடைந்தார்.