புதுச்சேரி வர்ணமுத்து மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29மே 2013 10:05
புதுச்சேரி: இடையன்சாவடி வர்ணமுத்து மாரியம்மன் கோவில் செடல் உற்சவம் நேற்று துவங்கியது.தினமும், விநாயகர், அம்மன், முருகன், வெங்க டேசபெருமாள் சாமிக்கு அபிஷேக ஆராதனை, இரவு சாமி வீதியுலா நடக்கிறது. வரும் 2ம் தேதி தீமிதி திருவிழா நடக்கிறது. அன்று காலை 7:00 மணிக்கு விநாயகர், அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், மாலை 4:00 மணிக்கு மிளகாய் அபிஷேகம் நடக்கிறது.மாலை 5:30 மணிக்கு அம்மனுக்கு செடல் உற்சவம், மாலை தீமிதி உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை இடையன்சாவடி கிராம மக்கள் செய்துள்ளனர்.