நாகர்கோவில்: கன்னியாகுமரி, விவேகானந்தா கேந்திர கடற்கரையில், 30 கோடி ரூபாயில், திருப்பதி வெங்கடாசலபதி கோயில் அமைக்கப்படுகிறது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் மற்றும் சென்னையில் உள்ள தேவஸ்தான உள்ளூர் தகவல் ஆலோசனை மையம் இணைந்து கன்னியாகுமரி, விவேகானந்தாகேந்திரா கடற்கரை வளாகத்தில் வெங்கடாசலபதி கோயில் கட்ட முடிவு செய்துள்ளது. இதற்கு, விவேகானந்தா கேந்திரா நிறுவனம் ஐந்து ஏக்கர் நிலத்தை, நன்கொடையாக வழங்கி உள்ளது. இங்கு வெங்கடேசபெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி கோயில்கள் அமைக்கப்படுகின்றன. 30 கோடி ரூபாயில் கோயில் கட்ட, மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கான பூமிபூஜை, ஜூன் 4 ம் தேதி காலை 6:00 மணிக்கு நடக்கிறது.