புதுச்சேரி: குருவப்பநாயக்கன்பாளையம் செல்லமுத்து மாரியம்மன் கோவில் 12ம் ஆண்டு செடல் திருவிழா நேற்று நடந்தது. கோவில் திருவிழா கடந்த 20ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், இரவு வீதியுலா நடந்து வந்தது. 26ம் தேதி பிடாரி அம்மனுக்கு பொங்கலிடுதல், நேற்று முன்தினம் மாலை 3.00 மணிக்கு ஐயனாரப்பனுக்கு பொங்கலிட்டு குதிரை விடுதல், இரவு 8.00 மணிக்கு, விநாயகர் மூஷிக வானத்திலும், கிருஷ்ணர் பின்னைமர கோவமரத்திலும், பூரணி பொற்கலை சமேத ஐயனராப்பன் குதிரை வாகனத்திலும், அம்மன் நாக வாகனத்திலும் வீதியுலா வந்தனர்.நேற்று காலை 10.00 மணிக்கு செடல் உற்சவம், பகல் 12.00 மணிக்கு சாகை வார்த்தல் நடந்தது. ஏற்பாடுகளை அறங்காவல் குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்தனர்.