பதிவு செய்த நாள்
06
ஜூன்
2013
05:06
எதையும் துணிச்சலுடன் சமாளிக்கும் ரிஷபராசி அன்பர்களே!
ராசிநாயகன் சுக்கிரனும் 2-ம் இடத்தில் உள்ளதால், பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். ஜூன் 24க்கு பிறகு குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சூரியன்,புதன் மிதுனத்தில் இருக்கும்போது சாதகமான பலன் தரமாட்டார்கள். ஆனால், குரு,சனி,ராகு முழு பலனை கொடுப்பார்கள். பெண்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர். ஜூலை 5,6,7 தேதிகளில் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். சுக்கிரன்,குருவால் வேலையில் சீரான நிலை இருக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். ஜூன் 27,28,29ல் எதிர்பாராத நற்பலன்கள் கிடைக்க பெறலாம். தொழில் சிறப்படையும். மாத தொடக்கத்தில் நல்ல பொருள் வரவும், பிற்பகுதியில் விரயமும் ஏற்படலாம். புதனால் அவப்பெயர் வரலாம். வெளியூர் பயணம் இருக்கும். ஜூன் 26,27,28ல் திடீர் பணவரவுக்கு வாய்ப்புண்டு. ஜூலை 2,3,7,8ல் சந்திரனால் தடைகள் வரலாம். மாத பிற்பகுதியில் அரசு வகையில் தொந்தரவு வரும். எனவே வியாபாரக் கணக்குகளை சரியாக வைத்துக்ககொள்ளவும். கலைஞர்களுக்கு, புகழ் பாராட்டு வரும். அரசியல்வாதிகள் பலனை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியிருக்கும். விவசாயிகளுக்கு வருமானம் நன்றாக இருக்கும். கால்நடை வகையில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். மாணவர்களுக்கு சுமாரான நிலைதான் நீடிக்கிறது. அதிகமாக சிரத்தை எடுத்தால் மதிப்பெண் குறையாது.பெண்களுக்கு தேவைஅதிகரிக்கும்.பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். புத்தாடை, நகை வாங்கலாம்.
அதிர்ஷ்ட எண்: 2,5 நிறம்: வெள்ளை, மஞ்சள்
நல்ல நாட்கள்: 5,6,7,8,13,14,15,16,17,20,21, 22,25,26,27,32
கவன நாட்கள்: 9,10
வழிபாடு: சனி பகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள். காக்கைக்கு அன்னம் இடுங்கள். பசுவுக்கு பசுந்தழை கொடுங்கள். சூரிய வழிபாடு நடத்துங்கள். இதனால் உடல் நலம் சிறப்படையும்.