பதிவு செய்த நாள்
06
ஜூன்
2013
05:06
நல்லதைப் போற்றும் மிதுன ராசி அன்பர்களே!
இம்மாதம் சீரான பலனை காணலாம். கேது,சுக்கிரன் நிலை, குருவின் பார்வை பலம் சிறப்பாக உள்ளது. சுக்கிரனால் சிறப்பான பணப்புழக்கம் இருக்கும். பெண்களால் பொருள் சேரும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். ஜூன் 24க்கு பிறகு மதிப்பு, மரியாதை கூடும். அரசிடம் இருந்து விருது கிடைக்கும். வியாபாரிகளுக்கு அரசின் சலுகை கிடைக்கும்.மற்ற கிரகங்கள் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் உங்கள் முயற்சியில் தடைகள் வரலாம். ஆனாலும், தீவிர முயற்சி எடுத்தால் உங்கள் முயற்சி கைகூடும். வீட்டிலும், உறவினர்கள் வகையிலும் சில பிரச்னைகள் வரலாம். புத்தாடை, அணிகலன் கிடைக்கும். இதன் காரணமாக மனமகிழ்ச்சி கூடும். ”பநிகழ்ச்சிகள் நல்லபடியாக நடக்கும். அரசு துறையில் பணிபுரிபவர்கள் நல்ல பலன் காணலாம். தனியார் பணியாளர்கள் இடமாற்றம் காணலாம். ஜூன்30, ஜூலை1ல் சிறப்பான பலன்கள் கிடைக்கும். மனதில் நிம்மதி இருப்பதால், தொழிலில் நல்ல முறையில் கவனம் செலுத்தி கூடுதல் வருமானம் காணலாம். ஜூன்21,22ல் திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. ஜூலை 4,5,6, 9,10,11ல் சந்திரனால் சிறு சிறு தடைகள் வரலாம்.கலைஞர்கள் ஸ்திரத்தன்மையில் இருப்பர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெற்று நல்ல வசதி பெறலாம். நற்பெயர் கிடைக்கும். அரசியல்வாதிகள் சிறப்பான நிலையில் காணப்படுவர். மாணவர்கள் குரு பார்வையால் நல்ல முன்னேற்றம் காணலாம். ஆசிரியர்களின் அறிவுரை கைகொடுக்கும். அதிக சிரத்தை எடுத்து படித்தால் சிறந்த மதிப்பெண் கிடைக்கும். விவசாயிகள் நவீன யுக்தியை பயன்படுத்தி விவசாயத்தை மேம்படுத்தலாம். பெண்கள், ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். ஜூன்23,24, ஜூலை 7,8ல் சிறப்பான பலனை காணலாம். அலைச்சலும் சோர்வும் ஏற்படும்.பித்தம், மயக்கம் போன்ற உபாதைகள் வரலாம்.
அதிர்ஷ்ட எண்: 5,6. நிறம்: சிவப்பு, வெள்ளை.
நல்ல நாட்கள்: ஜூன் 15, 16, 21,22,23,24, 30, ஜூலை1,2,3, 7,8, 12,13.
கவன நாட்கள்: ஜூன் 25,26.
வழிபாடு: ஊனமுற்றவர்களுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். தினமும் காலையில் சூரியனை தரிசனம் செய்யுங்கள். செவ்வாயன்று முருகன் கோயிலுக்கு சென்று வாருங்கள்.