திருப்போரூர்: திருப்போரூர் திருவஞ்சாவடி தெருவில் கங்கையம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்தாண்டு கூழ் வார்தல் விழா காப்பு கட்டுதலுடன் நேற்று தொடங்கியது. இன்று காலை விசேஷ அபிஷேகம் நடைபெறுகிறது. நாளை பிரதான விழாவான கூழ் வார்த்தல் நடைபெறுகிறது. காலை 8:00 மணிக்கு கரக ஊர்வலமும் பகல் 12:00 மணிக்கு கூழ்வார்த்தலும், இரவு 7:00 மணிக்கு வீதி உலாவும், இரவு 8:00 மணிக்கு கும்பம்படைத்தலும் நடக்கிறது.