பதிவு செய்த நாள்
08
ஜூன்
2013
10:06
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திலுள்ள சிவன் கோவில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நேற்று முன்தினம் நடந்தது. திருத்துறைப்பூண்டியில், பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், மருந்தீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு அபிஷேகமும் நடந்தது. இதைத்தொடர்ந்து, தீபாராதனைக்கு பின், பிரதோஷ நாயனார் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, பலி போட்டு, பிரகாரம் வலம் வந்து, பக்தர்களுக்கு காட்சியளித்தார். சிறப்பு பூஜைகளை சிவாச்சாரியார்கள் மகாதேவன், பாலு, சோமாஸ்கந்தன் ஆகியோர் செய்திருந்தனர். ஏற்பாட்டை செயல் அலுவலர் நீதிமணி, கணக்கர் சீனிவாசன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர். இதேபோல, திருத்துறைப்பூண்டி அருகே சிங்களாந்தி அமிர்தவள்ளி நாயகி உடனுறை மணிகண்டேஷ்வரர் கோவில், நெடும்பலம் காசி விஸ்வநாதர் கோவில், கள்ளிக்குடி நாகநாத ஸ்வாமி கோவில், வேலூர் சொர்ணபுரீஸ்வரர், கச்சணம் கைக்கிணேஸ்வர் கோவில், தண்டலச்சேரி நீநெறிநாதர் ஸ்வாமி கோவில், திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.