பதிவு செய்த நாள்
11
ஜூன்
2013
10:06
திருப்பதி: திருமலை ஏழுமலையானை ஞாயிற்றுக் கிழமையன்று, 91 ஆயிரம் பேர் தரிசனம் செய்தனர். திருமலையில், கடந்த வாரம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. கடந்த வியாழக்கிழமை துவங்கிய பக்தர்களின் கூட்ட நெரிசல், ஞாயிற்றுக் கிழமை வரை நீடித்தது. திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், ஞாயிறன்று காலை, "வி.ஐ.பி., பிரேக் தரிசனத்தை ரத்து செய்தனர். பின்னர், 300 ரூபாய் விரைவு தரிசனத்திற்கு முன்னுரிமை, அதிகாலையிலேயே தர்ம தரிசனம் மற்றும் திவ்ய தரிசன பக்தர்களை அனுமதித்தது, "வி.ஐ.பி., பிரேக் தரிசனத்தை ரத்து செய்தது, மாலை, 6:00 மணிக்கு திவ்ய தரிசனத்தை ரத்து செய்து, நீண்ட தூர தரிசனத்தை பின்பற்றியதால், ஞாயிற்றுக்கிழமை முழுவதும், 91,111 பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்தனர், ÷நற்று தரும தரிசனத்திற்கு, ஏழு மணி ÷நரமும், பாத யாத்திரை பக்தர்கள் தரிசனத்திற்கு, மூன்று மணி ÷நரமும் ஆனது. முந்நூறு ரூபாய் விரைவு தரிசனத்திற்கு ஒன்றரை மணி நேரமும் ஆனது. ÷நற்று அதிகாலை, 3:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை, 43,818 பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்தனர்.
உண்டியல் வருவாய்: திருமலை ஏழுமலையானுக்கு, வியாழக் கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை, பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையாக, 9.75 கோடி ரூபாய் வசூல் ஆனது. வியாழக்கிழமை 2.32 கோடி, வெள்ளி 2.39 கோடி, சனி 2.46 கோடி, ஞாயிறு 2.58 கோடி ரூபாயும் வசூலானது என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
புது லக்கேஜ் மையம்: பாத யாத்திரையாக வரும் பக்தர்களின் வசதிக்காக, திவ்ய தரிசனம் வரிசை தொடங்கும் இடமான, நாராயணகிரி 2வது ஓய்வு பவனம் எதிரில், புதிய லக்கேஜ் மையத்தை ஏற்படுத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
கூடுதல் லட்டு: பக்தர்களின் வசதிக்காக, எந்த பரிந்துரை கடிதமும் இல்லாமல், கூடுதலாக லட்டு வழங்கும் முறையை, நான்கு ஆண்டுகளுக்கு முன் தேவஸ்தானம் கொண்டு வந்தது. இதற்கு, நான்கு கவுண்டர்கள் ஏற்பாடு செய்து, ஒருவருக்கு, நான்கு லட்டுகள் வீதம், ஒரு நாளைக்கு, ஒரு லட்சம் லட்டுகளை வழங்கி வருகிறது. பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் சமயத்தில், மாலை, 4:00 மணிக்கே லட்டுக்கள் தீர்ந்து விடுகின்றன. என÷வ, கூடுதல் லட்டு எண்ணிக்கையை ஒரு லட்சத்தில் இருந்து ஒன்றரை லட்சமாக அதிகரித்து, நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.